Tamilnadu CM MK Stalin and Praggnanandhaa [File Image]
உலககோப்பை செஸ் போட்டி தொடர் அர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில், இந்திய வீரர்கள், பிரக்ஞானந்தா, குகேஷ், அர்ஜுன் எரிகேசி, விதித் ஆகியோர் காலிறுதி வரை முன்னேறினர்.
இதில், காலிறுதியில், இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகேசி ஆகியோர் மோதும் சூழல் ஏற்பட்டது. டெத் பிரேக் விதிப்படி விளையாடி பிரக்ஞானந்தா 5-4 எனும் வெற்றி வீதத்தில் அர்ஜுன் எரிகேசியை வீழ்த்தி பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதனால், அடுத்ததாக அரையிறுதியில் அமெரிக்க வீரரான பேபியானோ காருணாவுடன் மோதவுள்ளார். மேலும் இந்த காலிறுதி வெற்றி மூலம் அடுத்தாண்டு நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிக்கு தகுதி பெற்றுள்ளார்.
உலகக்கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியது மூலம் , உலக கோப்பை செஸ் போட்டியில் 2வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றார் பிரக்ஞானந்தா. உலகக்கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகும்.
உலகக்கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உலகக்கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர் எனும் உங்கள் வரலாற்று சாதனைக்காக வாழ்த்துகள் பிரக்ஞானந்தா. அரையிறுதி முன்னேறிய உங்களுக்கு ஒன்னும் ஒரு படி தொலைவு மட்டுமே உள்ளது. உங்கள் போட்டி இந்திய சதுரங்கத்தை உலகிற்கு மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…