Tamilnadu CM MK Stalin paid tribute to Major Saravanan [Image source :Twitter/ @sunnewstamil]
கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திருச்சியில் மேஜர் சரவணனுக்கு மரியாதை முதல்வர் மு.க.ஸ்டாலின் செலுத்தியுள்ளார்.
இன்று மற்றும் நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி மற்றும் தஞ்சை பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் முதல்வர் கலந்து கொள்ள உள்ளார்.
திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று கார்கில் போரில் இந்தியாவுக்குக்காக போர் புரிந்து உயிர்துறந்த வீரர்களை நினைவுகொள்ளும் தினத்தை முன்னிட்டு , திருச்சி கண்டோன்மண்டு பகுதியில் மேஜர் சரவணன் நினைவு தூணுக்கு மேஜர் சரவணன் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை அடுத்து, திருச்சி, சமயபுரம் பகுதியில் புரத்தாக்குடி ஊரில் மகளிர் உரிமை தொகை டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமை நேரில் சென்று பார்வையிட உள்ளார். அதனை தொடர்ந்து, திருச்சியில் திமுகவினர் பயிற்சி பட்டறை நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.
பயிற்சி பட்டறையில், வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் , அதற்கான வேலைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனை அடுத்து நாளை காலை திருச்சியில் வேளாண் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 நாள் கண்காட்சியை முதல்வர் துவங்கி வைக்க உள்ளார். இதில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்குகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…