Jimper Hospital [file image]
விஷச்சாராயம் விவகாரம்: கள்ளக்குறிச்சியில், விஷச்சாராயம் அருந்தியதால் 19 பேர் புதுச்சேரி, ஜிம்பர் மருத்துவமனையில் சிகிச்சையில் ஈடுபட்டு வந்த நிலையில் 16 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்று ஜிம்பர் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியதால் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, பல கட்சி தலைவர்கள் திமுக அரசை எதிர்த்து கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் “ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19, 2024 அன்று விஷச்சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு. உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவ குழுக்களால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது மேலும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்” என தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…