குஷ்புவை காங்கிரஸ் தொண்டர்கள் நடிகையாகத்தான் பார்த்தார்கள் -கே.எஸ்.அழகிரி

Published by
Venu

குஷ்புவை காங்கிரஸ் தொண்டர்கள் நடிகையாகத்தான் பார்த்தார்கள் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

சமீப காலமாகவே காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.மேலும்  பாஜகவில் இணையவே டெல்லி சென்றுள்ளார் என்று தகவல் பரவிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்புவை காங்கிரஸ் நீக்கம்  செய்வதாக அறிவித்தது.

எனவே இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில்  குஷ்பு  காங்கிரசில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார் .அவரது கடிதத்தில் , கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பிய என்னை போன்றவர்களை சிலர் ஒதுக்குவதாகவும்,மூத்த தலைவர்கள் புறக்கணிக்கின்றனர் என்றும் மக்களால் அங்கீகரிக்கப்படாத தலைவர்கள் என்னை அடக்கி வைத்தனர்.உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும். நீண்ட யோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்தேன் என்று  குஷ்பு கடிதத்தில் தெரிவித்தார்.காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதகாக அக்கடிதத்தில்   குஷ்பு தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், காங்கிரஸில் இருந்து குஷ்பு விலகியதால் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை .குஷ்புவை காங்கிரஸ் தொண்டர்கள் நடிகையாகத்தான் பார்த்தார்களே தவிர, தலைவராக பார்க்கவில்லை. காங்கிரஸில் அவர் தாமரை இலை மேல் தண்ணீர் போலதான் இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago