ksalagiri [Imagesource : Times of india]
உண்மையான அரசியல் தலைவராக இருந்தால் ராகுல் காந்தியை தேர்தல் களத்தில் மோடி சந்திக்க வேண்டும் என கேஎஸ் அழகிரி பேட்டி.
பிரதமர் “மோடி” என்ற குடும்ப பெயர் கொண்டவர்கள் ஏன் திருடர்களாக இருக்கிறார்கள் என அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, இன்று அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
ராகுலுக்கு எதிராக 10க்கும் மேற்பட்ட அவதூறு வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டி க்காட்டி குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தண்டனையைத் நிறுத்தி வைக்க நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை, தண்டனை வழங்கப்பட்டது நியாயமானது, சரியானது மற்றும் சட்டபூர்வமானது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
குஜராத் உயர்நீதிமன்றம் ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்ததால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும், குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளார். சிறை தண்டனையை நிறுத்திவைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் ராகுல் காந்தி தொடர்ந்து Disqualified MP ஆகவே தொடர்கிறார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது, செய்தியாளர் சந்திப்பில் கேஎஸ் அழகிரி, குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பார்த்த ஓன்றுதான்.
குஜராத் மண்ணில் எந்த நீதியையும் ராகுல் காந்தி எதிர்பார்க்கவில்லை. ராகுல் காந்தியை பின்புற வாசலில் வந்து மோடி அரசு முடக்க நினைக்கிறது. அவரை தேர்தலில் நிறுத்த விடாமல் சதி செய்கின்றனர். மக்கள் மன்றத்தில் ராகுல் காந்தியை முடக்க முடியாது. உண்மையான அரசியல் தலைவராக இருந்தால் ராகுல் காந்தியை தேர்தல் களத்தில் மோடி சந்திக்க வேண்டும் என சவால் விடுத்துள்ளார்.
மேலும், மத்திய பாஜக அரசால் எந்த துறைகளிலும் வெற்றி பெற முடியவில்லை. சாதி, பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்து மக்களை ரத்தம் சிந்த வைக்க முயற்சி செய்கின்றனர். ராகுல் தலைமையில் ஒரு ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்றும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு போடும் அனைத்து தடைகளையும் உடைத்து வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…