ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ள நிலையில் தற்பொழுது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ருபாய் அதிகரித்துள்ளதற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 25 ரூபாய் அதிகரித்து தற்பொழுது 850 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி ரூ.25, பிப்ரவரி 15இல் ரூ 50, பிப்ரவரி 25இல் ரூ.25, மார்ச் 2இல் ரூ.25, ஜூலை 1இல் ரூ.25 என படிப்படியாக கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் 32 முறை கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று காரணமாகவும், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பேரழிவினாலும் மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டிருக்கிறது.
மத்திய பா.ஜ.க. அரசு, மக்கள் மீது ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டிவிட்டது. டீசல் விலை பெட்ரோல் விலையை நெருங்கி ரூ.93.74 ஆக விற்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1 கேஸ் சிலிண்டரின் விலை ரூ.610.50 ஆக இருந்தது ரூ.240 விலை உயர்வு செய்யப்பட்டு, தற்போது ரூ.850 க்கு விற்கப்படுகிறது. சேலத்தில் 1 சிலிண்டர் விலை ரூ.868.50 ஆக உயர்ந்திருக்கிறது. வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.84 உயர்த்தப்பட்டு ரூ.1687.50 ஆக விற்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் மத்திய பா.ஜ.க. அரசின் வரிவருவாயை பெருக்குவதற்காக கலால் வரியை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வால் 29 கோடி நுகர்வோர் குறிப்பாக, தாய்மார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்படி, தமிழகத்திலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து விரைவில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலனில் அக்கறையில்லாமல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்தி வருகிற மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக அகில இந்திய அளவில் ஜூலை 7 முதல் 17 ஆம் தேதி வரை பலகட்டப் போராட்டங்களை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…