சேலம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை – சேலம் மாநகர ஆணையர்

வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சேலம் வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வெளியில் வரவேண்டாம் என்றும், முக கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாநகர ஆணையர், வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சேலம் வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சேலம் வருவோருக்கு நாளை முதல் மாநகராட்சி எல்லையில் பரிசோதனை செய்யப்படும் என்றும், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சேலம் மாநகர ஆணையர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025