டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 190 பேருக்கு கொரோனா.!

சற்று நேரத்திற்கு முன் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தமிழகத்தில் 77,330 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் இதுவரை 190 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என பீலா ராஜேஷ் கூறினார்.
நேற்று தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.