தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 4,013 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,013 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,92,420 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 227 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 115 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,933 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 4,724 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 24,23,606 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,60,194 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,33,22,908 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 35,881 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…
மதுரை : மதுரை வேலம்மாள் திடலில் இன்று (ஜூன் 8, 2025) மாலை 3 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…
சென்னை : கடந்த சில நாட்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை…
சென்னை : 2012-ல் இந்தியா A கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்தபோது, வீரர் செட்டேஷ்வர் புஜாராவுக்கு ஒரு…
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் காட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது.…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான…