உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்….

Published by
Kaliraj

உலகம் முழுவதும் பரவி தனது ஆட்டத்தை காட்டிக்கொண்டு இருக்கும்  கொடிய கொரோனா வைரஸ் தொற்றால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 64 ஆயிரத்தை கடந்ததுள்ளது.இதில்,  பல்வேறு நாடுகளை சேர்ந்த 64,675 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,201,443 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  இதில், 246,383 பேர் குணமடைந்தனர். மேலும் 42,288 பேர் கவலைக்கிடமான நிலையில் தற்போதும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் வூஹானில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 205 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதிலும் குறிப்பாக  குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை:

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 15,362 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,24,632- ஆக உயர்ந்துள்ளது.இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 681 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை:

ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 11,947 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126,168-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் புதிதாக 6,969  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை:
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,452 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 311,357 -ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,048 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் புதிதாக 34,196  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை:

ரான்சில் 89,953 பேருக்கு கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,560 அதிகரித்துள்ளது. பிரான்சில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,053 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில்  கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3072 ஆக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் 213 பேர் குணமடைந்தனர்.

கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485- ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3 ஆக  உள்ளது. தமிழ் நாட்டில் இதுவரை 7 பேர் குணமடைந்தனர்

Recent Posts

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

34 minutes ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

5 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

11 hours ago