தமிழகம் முழுவதும் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் குறைந்த பாடில்லை. இந்த கொரோனா வைரஸ் தொற்று பெரியவர், சிறியவர்,கர்ப்பிணி என எந்த பாகுபாடிறி அனைவரையும் தாக்கும் பெருந்தொற்றாக அறிவித்து அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது தான் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயமுத்தூரில், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்ணுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. கோயமுத்தூர், கரும்புக்கடை பகுதியை சேர்ந்த, 31 வயது கர்ப்பிணி பெண், இவர் கொரோனா பாதிப்புடன் கடந்த 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்க்கு கொரோனா வார்டில் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர், நேற்றிரவு ஓர் அழகான ஆண் குழந்தையை பெற்றுள்ளார். தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி, 218 பேர் கோயமுத்தூர் இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…