7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரின் விடுதலை தொடர்பான முடிவு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிசந்திரன், ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு, 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்.
இதனையடுத்து, 7 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என சிறையில் இருக்கும் சிலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், அரசியல் தலையீடு காரணமாக தாங்கள் விடுதலை செய்யப்படாமல் இன்னும் சிறையிலேயே இருப்பதாகவும், இவ்வாறு சிறையிலேயே இருப்பது மன உளைச்சலை ஏற்படுவதோடு, உடல் நலத்தையும் பாதிக்கிறது.
மேலும், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களுக்கு முன் கூட்டியே விடுதலை அளிப்பது தொடர்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டமும், மனிதநேய அடிப்படையில் வழிவகுக்கிறது. ஆனால், 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எங்களை விடுதலை செய்ய குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர். எனவே, 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள், பாரதிதாசன், நிஷா பானு ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இதே வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆகவே, இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 7 பேரின் விடுதலை தொடர்பான முடிவு குறித்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார் என கூறப்பட்டது.
மேலும், இந்த கருத்துக்களை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் நீதிமன்றம் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று கூறி வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…