#BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 3வது முறையாக நீட்டிப்பு!

ஆகஸ்ட் 8 வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 3வது முறையாக நீட்டிப்பு செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் ஜூன் 14ல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025