அமைச்சர் கைது மூலம் பாஜக அரசியல் செய்ய நினைக்கிறது.! இந். கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கண்டனம்.!

Published by
மணிகண்டன்

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகம், தலைமை செயலக அறை என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இன்று அதிகாலை அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து செல்ல முற்பட்டனர். தற்போது அவர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த கைது நடவடிக்கைக்கு திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கூறுகையில்,  அமலாக்கத்துறையின் அத்துமீறிய செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன். தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் அறையை சோதனை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என தனது விமர்சனங்களை முன் வைத்தார்.

தற்போது அமைச்சர் உடல் நலக்குறைவு காரணமாக இருக்கிறார். இருந்த போதும் அவர் மீதான கைது நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜக, தான் ஆளாத மாநிலங்களில் அந்த மாநில அரசுக்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. தமிழகத்தில் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே பாஜக இதனை செய்கிறது.
இதனை வைத்து பாஜக அரசியல் செய்ய நினைக்கிறது. இது பெரியார் மண் இங்கு பாஜக அரசியல் செய்ய முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான ”சலம்பல” ப்ரோமோ வெளியீடு.!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…

1 hour ago

“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…

1 hour ago

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

3 hours ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

3 hours ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

3 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

4 hours ago