மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான ”சலம்பல” ப்ரோமோ வெளியீடு.!
‘மதராஸி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘சலம்பல’ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் ஜூலை 31ம் தேதி மாலை 6 மணிக்கு முழுமையாக வெளியாக உள்ளது.

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக “மதராஸி” படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார், அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கான ப்ரோமோ ரிலீசாகி உள்ளது.
‘மதராஸி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ‘சலம்பல’ பாடலை சாய் அப்யங்கர் பாடியுள்ளார். இந்தப் பாடலை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார். வழக்கம் போல நகைச்சுவை கலந்த ப்ரோமோவாக உள்ளது. சூப்பர் சுப்பு இப்பாடலை எழுத, சாய் அபயங்கர் இதனை பாடியுள்ளார். இப்பாடல் நாளை மறுநாள் (ஜூலை 31-ம் தேதி) மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.
செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இந்தப் படம், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதற்கிடையில், படத்தின் ஆடியோ வெளியீடு குறித்த செய்திகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதன்படி, ஆகஸ்ட் 17 ஆம் தேதி லண்டனில் ஒரு பிரமாண்டமான இசை விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு புரட்சிகரமான வேடத்தில் நடிக்கிறார், மேலும் படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரும் நடிக்கின்றனர்.