[Representative Image ]
மத்திய பாஜக அரசை கண்டித்து நாளை முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மத்திய பாஜக அரசு, மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்துகிறது. எனவே, பிரதமர் மோடி தலைமையிலான அரசே வெளியேறு என வலியுறுத்தி செப்.12, 13, 14 ஆகிய தினங்களில் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது என்றுள்ளார்.
அதாவது “மோடி அரசே வெளியேறு” என்ற முழக்கத்தை முன்வைத்து நாளை முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என்றும் நாளை முதல் 3 நாட்களுக்கு நூற்றுக்கணக்கான மையங்களில் நடக்கும் மறியல் போராட்டத்தில் பல்லாயிரம் பேர் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையிலெடுத்து ஆளும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தியது.
மணிப்பூர் பிரச்சனை, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அதானி விவகாரம், பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மத்திய பாஜக அரசை கண்டித்து நாளை முதல் 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
விலைவாசி உயா்வு உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நாளை முதல் 14 வரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெறவுள்ள தொடா் மறியல் போராட்ட ஆயத்தக் கூட்டம் வாழக்கரையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் எஸ். பக்கிரிசாமி தலைமை வகித்தாா்.
அப்போது, நாளை முதல் நடைபெற உள்ள போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் டி.செல்வம் பேசினாா். மேலும், இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. எனவே, நாளை முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…