குறுவை சாகுபடி: ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

காவிரி ஆற்றில், கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் பெறப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிட முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் 12-6-2023 அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் தொடர்ந்து பெறப்படாத காரணத்தால், மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் திறந்து விட இயலாத நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வாடிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதித்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு சுமார் 3,0000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், முதலமைச்சர் ரூ,13,500 வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி
Tags: #MKStalin

Recent Posts

உடல் நலக்குறைவால் இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்!

சென்னை : தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான வேலு பிரபாகரன் (வயது 68), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள…

13 minutes ago

நெல்லை : 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை.. 2 பேருந்துகளுக்கு தீ வைப்பு!

நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது…

52 minutes ago

கூகுள் ஃபைண்ட் ஹப் : சிம் எடுத்தாலும் இனிமே போனை கண்டுபிடிக்கலாம்..அசத்தல் அப்டேட்!

கூகுளின் Find My Device இப்போது Google Find Hub ஆக மாறி, ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இயர்பட்ஸ், புளூடூத் டிராக்கர்கள்…

1 hour ago

ரூ.12,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல்…பிரதமர் மோடி பீகார் பயணம்!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம்…

2 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

2 hours ago

மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்ஜாமின்: சென்னை நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில்,…

2 hours ago