FireWorks [Image source : file image ]
சிவகாசி ஊராம்பட்டியில் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி ஆனையூர் அருகே பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலை 25 அறைகள் கொண்டது. இதில், 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். வழக்கம் போல் ஊழியர்கள் பலரும் வேலை செய்துகொண்டிருந்தபோது, பட்டாசுக்கு மருந்து செலுத்தும் அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தில் அங்கு பணியாற்றிய இருளாயி, அய்யம்மாள், குமரேசன், சுந்தர் ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 2 அறைகள் இடிந்து தரைமட்டமாகியது.
மேலும், இந்த தீ விபத்தில் ஏற்கனவே, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குமரேசன்(35), சுந்தர்ராஜ்(27) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அய்யம்மாள் (70) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த இருளாயி என்பவருக்கு சிவகாசி அரசு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…