குரூப்-2 தேர்வில் மொழிப்பாடங்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதை திரும்பப்பெற வேண்டும் – திருமாவளவன்

குரூப்-2 தேர்வில் மொழிப்பாடங்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதை திரும்பப்பெற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
குரூப் -2 முதநிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக பிரதானத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், குரூப்-2 தேர்வில் மொழிப்பாடங்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதை திரும்பப்பெற வேண்டும். டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு கிராமப்புற மாணவர்கள் அரசு பணியில் நுழைவதை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025