தமிழகத்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பே அதிகம் – மருத்துவத்துறை செயலாளர்

தமிழகத்தில் அதிகமானோருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 80% பேர் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவித்தார்.
சமீப நாட்களாக கொரோனா பாதிப்பில் 100% டெல்டா வகையால் ஏற்படுகிறது. டெல்டா வகை கொரோனா வைரஸ் சிகிச்சை குறித்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை.தேவையான சிகிச்சை வசதிகள் தமிழகத்தில் உள்ளன. அதிக பண்டிகைகள் வரவுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கூட்டம் கூடுவதால் தான் கொரோனா அதிகளவு பரவுகிறது என்றும் கூட்டம் கூடுவதை தவிர்த்து மக்கள் எச்சரிக்கையோடு இருந்தால் தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வகைகளை கண்டறியும் மரபணு ஆய்வகம் சென்னையில் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் சோதனை அடிப்படையில் செயல்பட தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025