சுதந்திர தின வாழ்த்துக்கள் கூறிய துணை முதல்வர்.!

Published by
பாலா கலியமூர்த்தி

நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் – துணை முதல்வர் பன்னீர் செல்வம்.

நாடு முழுவதும் நாளை 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து தலைவர்களும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் துணை முதல்வர் ஒ.பன்னிர் செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில், ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கினை தகர்த்தெறிந்து, நம் தாய்த்திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வேளையில், மாண்புமிகு அம்மா அவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளை சிறப்பிக்க திருவுருவச் சிலைகள், மணி மண்டபங்கள் அமைத்தல், தியாகிகள் ஓய்வூதியத் தொகை உயர்த்துதல் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் என்பதை நினைவு கூர்வதில் மகிழ்கிறேன் என்றும் இப்பொன்னாளில், விடுதலைக்காக இன்னுயிர் நீத்த தியாகிகளை போற்றி வணங்கி, தாய்த்திருநாடும், நம் தமிழ்நாடும் வளம் பெற ஒற்றுமையாய் உழைத்திட உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

21 minutes ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

3 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

3 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

4 hours ago

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

4 hours ago

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…

4 hours ago