Photo: Bloomberg
சென்னையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை.
மகளிர் உரிமைத்தொகை அதாவது பெயர் மாற்றம் செய்யப்பட்ட கலைஞர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னையில் திட்டம் செயலாக்கம் தொடர்பாக தொடர்புடைய துறை அலுவலர்களுடன் கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
உரிமைத்தொகையை வழங்கும் முன் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. பயனாளிகளை கண்டறிவது, நியாயவிலை கடைகளை கண்டறிவத்து குறித்தும், உரிமைத்தொகை வழங்கும் முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய, சென்னை மாநகராட்சி ஆணையர், தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு ரேஷன் கடைகள் கண்டறியப்பட்டுள்ளன.
குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் தேவையான முகாம்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பள்ளி கூடங்கள், சமுதாய நல கூடங்கள், அரசு அலுவலகங்கள், இரவு காப்பகங்கள் என முகாம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் மூலம் பயோமெட்ரிக் முறையில் பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படும். பயோமெட்ரிக் கருவிகளை மண்டல அலுவலர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பயனாளிகளின் விவரங்களை சேகரிக்கும் முகாம்களுக்கான ஊழியர்கள் நியமனம் செய்யப்படும். முகாம்களில் பணியாற்ற பொறுப்பு அலுவலர், சுகாதார மேற்பார்வையாளர் உள்ளிட்ட ஊழியர்களும் நியமனம் செய்யப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார். கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. தற்போது, அதற்காக அரசு மற்றும் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…