தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பொதுப்பெயரில் அறிவிக்க கோரிய பரிந்துரைக்கான தீர்வு 30 நாட்களுக்குள் கிடைக்கும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய சாதிகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் ஒரே பொதுப் பெயரில் பெயரிட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இது தொடர்பான போராட்டங்களும் நடைபெற்று வந்தன.
ஆகவே அண்மையில் முதலமைச்சர் பழனிசாமி , தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளுக்கு பொதுப்பெயரிடுவது குறித்து அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று “தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட” மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும் என்று தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில்,தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயரிட்டாலும் 7பிரிவினரின் தற்போதைய சமூக, பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பட்டியல் வகுப்பில் தொடர ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளது. இப்பிரிவினர் ஏற்கனவே பெற்று வரும் சலுகைகள் தொடரும். இதற்கான ஆணைகளை மாண்புமிகு அம்மாவின் அரசு விரைவில் பிறப்பிக்கும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், 7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பொதுப்பெயரில் அறிவிக்க கோரிய பரிந்துரை மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் இதற்கான தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…