அத்திவரதர் பாதுகாப்பு பணியில் காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு!

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சயனகோலத்தில் காட்சியளித்தார். பிறகு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இன்று வரை நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.
இன்றுடன் அத்திவரதர் வைபவம் நிறைவடைய உள்ளது.இதை தொடர்ந்து 45 நாள்களுக்கு மேலாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறைக்கு டிஜிபி திரிபாதி பாராட்டு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒவ்வொரு காவல்த்துறையினரும் வரலாற்று உடன் ஒரு பந்தத்தை ஏற்படுத்தி உள்ளார். விமர்சனம் செய்வபவர்கள் ஒரு பொருட்டல்ல எனவும் ,கடமை உணர்வுடன் மேலான நோக்கத்திற்காக தன்னை அர்பணிப்பவரே வெற்றி பெறுவார் என டிஜிபி திரிபாதி தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025