அதிமுக தலைவர் யார் என தொண்டர்களுக்கே தெரியவில்லை.! விஜயகாந்த் மகன் விமர்சனம்.!

VIJAYKANTH

அதிமுக தலைவர் யார் என அந்த கட்சி தொண்டர்களுக்கே தெரியாவில்லை என தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் மகன் தெரிவித்துள்ளார்.

நேற்று தேனியில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது கூறுகையில் அதிமுக கூட்டணி பற்றியும் கட்சி பற்றியும் கேட்கப்பட்டது. அதற்கு விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் சில விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர் கூறுகையில், அதிமுக தலைவர் யார் என அதிமுக தொண்டர்களுக்கே தெரியாது. எடப்பாடி பழனிசாமி சென்றாலும் வணக்கம் வைக்கிறார்கள், ஓ.பன்னீர்ல்செல்வம் சென்றாலும் வணக்கம் வைக்கிறார்கள். சசிகலா சென்றாலும் வணக்கம் வைக்கிறார்கள் என குறிப்பிட்ட அவர், முதலில் அதிமுக அவர்கள் கட்சிக்குள் செயல்படட்டும், பிறகு எதிர்க்கட்சியாக செயல்படுகிறது பற்றி பேசுவோம் என விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணி பற்றி பேசுகையில், அது தேர்தல் சமயத்தில் கேப்டனும் (கட்சி தலைவர் விஜயகாந்த்) கட்சி தலைமையும் முடிவு எடுப்பார்கள் என கூறிவிட்டு சென்றார் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்