பிரதமர் மோடிக்கு யாரும் திருக்குறள் சொல்லி கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் தமிழகத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,எங்களது கூட்டணி உறுதியான கூட்டணி.இதை ஏற்கனவே எங்களது தேசிய பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.எங்களது கூட்டணி தொடர்கிறது.திமுக காங்கிரஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடைய வாய்ப்பு உள்ளது.தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று எங்கும் சொல்ல முடியாது.பிரதமர் மோடிக்கு யாரும் திருக்குறள் சொல்லி கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. அனைத்து திருக்குறளும் படித்து வைத்திருக்கிறார். தைப்பூசத்திற்கு விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்கள் இருந்த நிலையில் ,அதனை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…