தி.மு.க பதவிக்கு வந்த கொஞ்ச காலத்துக்காவது நல்லது செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள் என டிடிவி தினகரன் அறிக்கை.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் திமுகவின் ஒரு ஆண்டுகால ஆட்சி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சி அவர்கள் விளம்பரப்படுத்திக் கொள்வதைப் போல சாதனையல்ல; தமிழ்நாட்டு மக்களுக்கு தினம் தினம் சோதனையாகவே அமைந்திருக்கிறது.
தி.மு.க பதவிக்கு வந்த கொஞ்ச காலத்துக்காவது நல்லது செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி எந்த அறிகுறியும் இந்த ஆட்சியில் தெரியவில்லை காரணம் தி.மு.க இன்னும் மாறவில்லை, இன்னும் திருந்தவில்லை, மக்களை ஏமாற்றும் மனப்பான்மை இவர்களை விட்டு விலகவில்லை என்பதைத்தான் இந்த ஓராண்டு கால ஆட்சி நமக்கு சொல்லும் செய்தி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அது போலத்தான், இந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சிக்கு கடந்த ஓராண்டு காலம்தான் உதாரணம்!’ என தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…