காவிரி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது – வானதி சீனிவாசன்
காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் சில வரிகளுக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நாங்கள் அளிக்கும் திருத்தங்களை சேர்த்தால் தீர்மானத்தை ஆதரிப்போம் என தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த தனித்தீர்மானம், முழுமையாக இல்லை எனக்கூறி சட்டமன்றத்தில் பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. அதன்பின் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், காவிரி நீர் பற்றிய தீர்மானம் முழுமையாக இல்லை. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் உள்ளது. அணை பாதுகாப்பு மசோதா மத்திய அரசு கொண்டு வந்தபோது எதிர்த்தது என்ன காரணம்? ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள்.
விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி பிரதமர் மோடியின் ஆட்சி சட்டரீதியான நடவடிக்கை எடுத்தது. காவிரி நீரை கூட பெற்று தர முடியாத இந்த மாநில அரசு, பிரதமர் மோடியை எதிர்கின்றதா?
காவிரி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. இந்த தீர்மானத்தில் காங்கிரசின் பெயரை குறிப்பிடாமல், கர்நாடகா அரசு என கூறுவது ஏன்? தமிழ்நாடு அரசு கொண்டுவந்த தனித்தீர்மானம் ஒரு நாடகம் தான் என தெரிவித்துள்ளார்.