திராவிட முன்னேற்ற கழகட்தின் பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் (98) அவர்கள் கடந்த 7ம் தேதி காலமானார். இவர், கடந்த 1977ம் ஆண்டு முதல், தொடர்ந்து 43 ஆண்டுகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு வருகிற 29ம் தேதி கூடும் என்று திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இந்நிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 15ம் தேதி வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக திமுக பொதுக் குழு கூட்டம் வருகிற 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் வழியாக கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையிலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவுரையின் படி, வரும் 29-ம் தேதி நடைபெறவிருந்த கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தும் வருகிற 31ம் தேதி வரை ஒத்தி வைத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…