BJP [Telangana]
திமுக மற்றும் பாஜக கட்சியை சார்ந்தவர்கள் ஒருவரையொருவர் மாறி மாறி விமர்சிப்பது வழக்கம். அந்த வகையில், பாஜக எக்ஸ் தள பக்கத்தில், திமுக ஐடி விங் குறித்து விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்த பதிவில், ‘ஒரு கட்சியின் ஐடி விங் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான உதாரணம் திமுக ஐடி விங் தான்! “பொளக்கப்போறோம்”, “அடிச்சு நவுத்த போறோம்” என்றெல்லாம் பதிவிட்டிருக்கும் இந்த “அறிவார்ந்த” விங், ஆண்டாண்டு காலமாக சைய்து வரும் வேலைகள் என்னவென்று அனைவரும் அறிவார்கள்.
1. எதிர்க் கருத்துச் சொல்பவர்களை முதலில் ஆபாசமாகப் பேசுவது, பின்பு அவர்கள் மீது அவதூறு பரப்புவது, கடைசியில் காவல்துறையை ஏவி விடுவது…
2. “மோடி 15 லட்சம் தருவேன்னு சொன்னார்” என்பது முதல் “நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் உதயநிதிக்குத் தெரியும்” என்பது வரை கழகப் பொய்களை ஓயாமல் பரப்புவது…
3. யார் என்ன சாதனை செய்திருந்தாலும் அதன் மீது திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்டி அதற்கு “கலைஞர் தான் காரணம்” என்று சொல்லி கருப்பு-சிவப்பு ஹார்ட்டின் போடுவது…
4. பெண்களை இழிவாகவும், கொச்சைப்படுத்தியும் பேசுவது, ஹிந்து மக்களின் நம்பிக்கைகளை அவமதிப்பது…
5. எல்லாவற்றையும் விட மிக முக்கியமான பணி – விடிய விடிய விடியா வாரிசுகளுக்கு வக்காலத்து வாங்குவது…
இத்தகைய காரியங்களை அல்லும் பகலுமாய் செய்து “Negativity” தலைக்கேறியதாலும், தலைவர் திரு . அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து திமுக அரசின் அவலங்களைக் கேள்வி கேட்டு வருவதாலும் சோர்ந்து போன உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்த, ஒரு கேலிக்கூத்து நிகழ்ச்சியைப் பல கோடி ரூபாய் செலவில் திமுக நடத்த, கடைசியில் அந்த “அறிவார்ந்தவர்கள்” பொளந்து கட்டியதெல்லாம் அங்கே பரிமாறப்பட்ட மட்டன் பிரியாணியைத் தான் என்று நினைக்கும் பொழுது கொள்கை எதிரிகளான எங்களுக்கே பரிதாபம் தோன்றுகிறது!
பி. கு.: திமுக-வின் இந்த “Wing” நிகழ்ச்சி நடந்த நாளில் கூட பாஜக தான் டிரெண்டிங் ஆனது என்பது இன்றைய நிலவரங்களின் உண்மையான எடுத்துக்காட்டு!’ என விமர்சித்துள்ளனர்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…