திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது உட்கட்சி பொதுத்தேர்தல் வரும் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெறும் என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அறிவித்தது. இந்த தேர்தலில் கிளை முதல், பேரூராட்சி , ஒன்றியம் , நகரம் மற்றும் மாநகரம் வாரியாக உட்கட்சி பதவிகளுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது . இதனை தொடர்ந்து இதேபோல், மாவட்ட , தலைமை , பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில், முதல் கட்டமாக கிளைக்கழகத்திற்கும் அதனை தொடர்ந்து பேரூராட்சி , ஒன்றியம், கழகத்திற்கும் தேர்தல் நடைபெறும் என்றும். இதன் பின்னர் புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர் ,பொதுச்செயலாளர் ,பொருளாளர் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 17-ம் தேதி) இதற்க்காக திராவிட முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை சரியாக 5 மணிக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…