திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி.!

திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே துரைப்பாக்கம் பகுதியை சார்ந்த தாண்டவமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் குமார் ஆகியோர் கோவில் நிலத்தில் சாலை அமைக்க 50 பேருடன் வந்துள்ளனர். அப்போது, திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி மற்றும் ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் நடந்தது.
இதையடுத்து, லட்சுமிபதி துப்பாக்கியால் சுட்டபோது ஒரு குண்டு காரிலும் மற்றொரு குண்டு ஸ்ரீனிவாசன் என்பவர் முதுகில் பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் உட்பட 13 பேரும், எதிர்தரப்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதயவர்மன் உட்பட 11 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா காணொளி மூலம் விசாரித்தார். இந்த விசாரணையில், இதயவர்மன் உட்பட 11 பேர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இதற்கிடையில், இதயவர்மனை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தாக்கல் செய்த மனு வருகின்ற புதன் கிழமை விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025