டாக்டர் சைமன் உடலை தோண்டி எடுத்து கல்லறையில் அடக்கம் செய்யலாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து கல்லறையில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனைவியின் கோரிக்கையை ஏற்று சைமன் உடலை கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய ஆணையிட்டுள்ளது. ஆவடி வேலங்காடு இடுகாட்டிலிருந்து பாதுகாப்புடன் உடலை தோண்டி எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் சைமன் தனியார் மருத்துவமனையில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியவர். அவர் சிகிச்சை அளித்த நபர்களிடம் இருந்து, அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டதால், கடந்த வருடம் ஏப்ரல் 19ம் தேதி காலமானார்.
இதையடுத்து மருத்துவர் சைமனின் உடலை மயானத்தில் புதைக்க இரண்டு இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், காவல்துறையின் பாதுகாப்போடு, அவரது உடல் வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது.
அவரை, கீழ்பாக்கம் சிமெட்ரிஸ் போர்டு என்ற தனியார் கல்லறை இடத்தில் அடக்கம் செய்யவேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்தனர். ஆனால், தனியார் கல்லறை நிர்வாகம் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மறுத்துவிட்ட நிலையில், தற்போது சைமன் உடலை தோண்டி எடுத்து அந்த கல்லறையில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025