MKStalin [Image Source : Twitter/@CMOTamilNadu]
நீதிக்கட்சியின் தந்தை தியாகராயரின் 172-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நினைவுபடுத்தும் விதமாக ட்வீட் செய்துள்ளார்.
நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவரான வெள்ளுடை வேந்தர் சர்.பி.தியாகராய செட்டி என்று அழைக்கப்படும் பிட்டி தியாகராயரின் 172-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் இவர் சென்னை கொருக்குப் பேட்டையில் வசித்து வந்த அய்யப்ப செட்டியார், வள்ளி அம்மாள் தம்பதியருக்கு 1852ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி மூன்றாவது மகனாகப் பிறந்தார்.
1920ம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு பரிந்துரையின்படி நகராண்மைத் தலைவரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற நேரடி தேர்தலில் வெற்றி பெற்ற முதல் மேயர் சர்.பிட்டி. தியாகராயர் ஆவார். மேலும், 1919 முதல் 1923 வரை நகராண்மை தலைவராகப் பதவி வகித்த தியாகராயரை சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்குமாறு ஆளுநர் கோரினார். ஆனால் வர அதனை ஏற்க மறுத்தார்.
1925ம் தியாகராயர் மரணத்தை சந்தித்தபோது இவரது நினைவாக சென்னை நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட தியாகராய நகருக்கு (டி. நகர்) இவரது பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் இவரது பிறந்தநாளான இன்று அவரை நினைவு கூறும் வகையில் அமைச்சர்கள் பலரும் அவரது உருவச்சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நினைவுபடுத்தும் விதமாக ட்வீட் செய்துள்ளார். அதில், “திராவிட வீரனே விழி, எழு, நட!” எனத் திராவிட இனத்தைத் தட்டியெழுப்பிய நீதிக்கட்சியின் தந்தை தியாகராயரின் பிறந்தநாள் இன்று, மாணவர்க்கு மதிய உணவு வழங்கி இன்று காலைச் சிற்றுண்டி வழங்கும் நமது திராவிடியன் மாடலுக்கு முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் அவர். அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து கொள்கை நடைபோடுவோம். தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…