விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் இந்த விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பலர் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளரான டிடிவி தினகரன் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, வினைகளை தீர்த்து வெற்றிகளை தந்திடும் விநாயகப்பெருமான் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
கொரோனா பேரிடரால் ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் விரைவில் அகன்று, உடல் ஆரோக்கியமும், பொருளாதார வளமும், மகிழ்ச்சியான வாழ்வும் ஒவ்வொருவருக்கும் சாத்தியமாகட்டும். உலகெங்கும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும். அதற்கு முழு முதற் கடவுளான விநாயகரின் அருள் துணை நிற்கட்டும் என்று வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…