வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் குடிப்பதற்கு இடைவேளை விட நடவடிக்கை… அமைச்சர் அன்பில் மகேஷ்.!

மாணவர்கள் பள்ளிகளில் தண்ணீர் குடிப்பதற்கு இடைவேளை விட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தின் 6-12 ஆம் வகுப்பிற்கான அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன. விடுமுறைக்கு பின் மாணவ, மனைவியர்கள் அனைவரும் இன்று பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் சென்றனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளில் குழந்தைகள் அனைவருக்கும் புத்தகப்பை மற்றும் புத்தகங்களை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.
கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் பள்ளிக்கு வருகை தந்துள்ள 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா புத்தகப்பை மற்றும் புத்தகங்களை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தோம்.#SchoolReopen@tnschoolsedu pic.twitter.com/GsLIZVLU1b
— Anbil Mahesh (@Anbil_Mahesh) June 12, 2023
இதனையடுத்து பேசிய அவர், கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் மாணவ, மாணவியர்கள் தண்ணீர் குடிப்பதற்கென்று இடைவேளை விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். கேரள பள்ளிகளில் தண்ணீர் குடிக்க இடைவேளை விடப்படுவது போல், தமிழகத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.