தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு உதவிகளை மேற்கொள்ளும் பராமரிப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு ‘இ-பதிவு’ செய்துகொள்வதற்கான வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 வாரங்கள் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.எனினும், தொழிற்சாலைகள்,அத்தியாவசிய பொருட்கள் விற்பனை,மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால்,அவசர தேவைக்கு வெளியே செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதன்படி,உரிய மருத்துவ காரணங்கள்,தொழிற்சாலைகளுக்கு செல்வோர் மற்றும் இறப்புகளுக்காக மட்டும், https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையதளத்தில் இ-பதிவுக்கான அனுமதி அளிக்கப்பட்டு,உடனடியாக இ-பதிவும் கிடைத்து வந்தது.
இந்நிலையில்,தற்போது இந்த பிரிவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான உதவிகளை மேற்கொள்ளும் பராமரிப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு ‘இ-பதிவு’ செய்துகொள்வதற்கான வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால்,இனி தடையின்றி உதவிகளை வழங்க முடியும் என தன்னார்வலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதற்கு முன்னதாக,ரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்வோருக்கு இ-பதிவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…