சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில், உண்மையை மூடிமறைக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முயற்சித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 2015 ஆம் ஆண்டில் சென்னையில் கனமழை பெய்த போது, செம்பரம்பாக்கம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதா ? அல்லது உபரிநீர் வெளியேற்றப்பட்டதா ? என்பது குறித்து சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில், உண்மையை மூடிமறைக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முயற்சித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நவம்பர் 17இல் 18000 கனஅடி நீரும், டிசம்பர் 2இல் 29000 கனஅடி நீரும் இரவு நேரத்தில் திறந்துவிடப்பட்டதால் 600கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உடைமைகளை இழப்பதற்கு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு காரணமாக இருந்தது.
முதலமைச்சரோடு தொடர்பு கொள்ள முடியாமல் திண்டாடிய காரணத்தினால் தான் திறக்க வேண்டிய நேரத்தில் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளைத் திறக்காமல் , ஒரே நேரத்தில் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்றைய அ.தி.மு.க. அரசின் பொறுப்பற்ற மெத்தனப் போக்கு காரணமாகத் தான் சென்னை மாநகரில் அத்தகைய மனித பேரவலம் நிகழ்ந்ததை மறுக்க முடியுமா ?
2015 ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கை ஒரு படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மேற்கொள்வார் என்று உறுதியாக நம்புகிறோம்.’ என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…
கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில்…