தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்..!

Published by
லீனா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதனிடையே, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.  இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம் என அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

 அதிமுக கூட்டணி முறிவை தொடர்ந்து  நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதற்காக பணியில் அதிமுகவினர் இறங்கியுள்ளனர். இந்த நிலையில், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் குறித்து அதிமுக அறிக்கை வெளியிட்டு இருந்தது.

அந்த அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில், வரும் 17ம் தேதி காலை 10.30 மணிக்கு, சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கண்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

3 minutes ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

6 minutes ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

1 hour ago

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…

2 hours ago

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

2 hours ago

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

5 hours ago