இந்திய தேர்தல் ஆணையக் குழு வருகை ! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.ஆகவே இந்திய தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான குழு தமிழகம் வர உள்ளது.வருகின்ற 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரண்டு நாள் பயணமாக இந்த குழு தமிழகம் வருகிறது.இந்த குழு அரசியல் கட்சிகள்,மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உட்பட பல தரப்பினருடன் ஆலோசனை நடத்த உள்ளது.
இந்நிலையில் குழு தமிழகம் வர உள்ள நிலையில் ,தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025