அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளான பாமக, பாஜக மற்றும் சிறிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகி, தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலே வெளியிடப்பட்டது. இதனிடையே, அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பல முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இரட்டை இலக்கத்தில் 12 தொகுதிகள் கேட்ட நிலையில், எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக அதிமுக தெரிவித்தாக கூறினார். 6 தொகுதிகள் போதாது என்றும் சற்று அதிகரித்து கேட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும், இதற்கு அக்கட்சி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்னும் சற்று நேரத்தில் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…