அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல், நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலகங்களில் அந்தந்த தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் பரிசீலினை செய்யப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இணைக்கப்பட்ட ஆவணங்கள், முன்மொழிபவர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் வேட்மனு மீதான பரிசீலனை நடைபெற்று வந்த நிலையில், சில தகவல்கள் மறைக்கப்பட்டதாக திமுக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக அண்ணாமலையின் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், அந்த வழக்குகள் குறித்த தகவல்கள் வேட்புமனுவில் அவர் தெரிவிக்கவில்லை எனவும் திமுக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…