சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் கடந்த ஒரு வாரமாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, காங்கிரஸ் 25 தொகுதிகள் மற்றும் ஒரு கன்னியாகுமரி மக்களவை சீட்டு, விசிக 6, மதிமுக 6, சிபிஐ 6, சிபிஎம் 6, ஐயூஎம்எல் 3, கொ.ம.தே.க. 3, ம.ம.க. 2, த.வா.க. 1, ம.வி.க. 1, ஆதித்தமிழர் பேரவை 1 ஆகிய 60 தொகுதிகளை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதில் குறிப்பாக வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 174 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. சில கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மந்தம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி கூட்டணி கட்சிகளை சேர்த்து 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப்படும் என தகவல் கூறப்பட்டது.
இதையடுத்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை அழைத்து, முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் கூட்டணி கட்சிகளுக்கு எந்தந்த தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், சற்று கூட்டணி கட்சிகளுடன் இழுபறி இருப்பதால், தொகுதிகளின் பட்டியல் நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…