#ElectionBreaking: முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை., அமமுக – தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை.!

சட்டப்பேரவை தேர்தலுக்கான தேமுதிகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணி அமைப்பதா? என மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு எட்டப்படும் என அக்கட்சி துணை செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்திருந்தார். ஆகையால், இன்று மாலை மீண்டும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என கூறப்பட்டது.
இதனிடையே, அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வரவேண்டும் என அக்கட்சி துணைத் தலைவர் பொன்ராஜ் வேண்டுகோள் விடுத்திருந்தார். கூடிய விரைவில் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷை சந்தித்து, அவர்களை மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு அழைக்க இருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கூறப்படுகிறது. தனித்து போட்டியிடலாமா? அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி வைக்கலாமா? என்று தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான தேமுதிகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிமுகவில் இருந்து விலகிய தேமுதிகவிடம் அமமுக மறைமுகமாக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் சூழலில், அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025