மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவில்லமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்கள், கடந்த 2016-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மராய்ந்தார். இவரது மறைவு அரசியல் பிரபலங்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜெயலலிதா வசித்து வந்த, போயஸ் தோட்ட வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்று, 2017-ம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பிற்கு, ஜெயலலிதாவின் உறவினரான தீபா எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, தமிழக அரசு போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக்குவதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியது.
இதுகுறித்து வருவாய்த்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், வேதா இல்லத்தில் தற்போது யாரும் வசிக்கவில்லை என்றும், அந்த நிலத்தை கையகப்படுத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், போயஸ் தோட்டம் அமைந்துள்ள இடத்தின் நிலத்தின் அடியில், எவ்விதமான கனிம வளங்களும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவில்லமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…