[FILE IMAGE]
ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார். இவ்வழக்கில் இருந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்திருந்த இரு மனுக்களை சமீபத்தில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த சமயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. சிறைத் துறை மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில், அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த சூழல் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என ஐகோர்ட் நீதிபதி அறிவித்திருந்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – இன்று ஐகோர்ட்டில் விசாரணை!
இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை வரும் 16ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து உடல்நிலை இன்னும் முழுமையாக குணமடையவில்லை என செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி தொடர்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் 9 மருத்துவர்களின் அறிக்கை அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…