பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் 2 வாரம் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டது. எனவே தேர்வுகளும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.
தற்போது தொற்று பாதிப்பு குறைந்த நிலையில், அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் செமஸ்டர் உட்பட அனைத்து தேர்வுகளும் வகுப்பறையில் நேரடியாக நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ள நிலையில், பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் மற்றும் செய்முறை தேர்வு நடத்த திட்டமிட்டிருந்தது.
இதையடுத்து, மாணவர்கள் நேரடி தேர்வுக்கு தயாராக கூடுதல் அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறுகையில், டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 27-ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…