[file image]
500 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.
குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு தொடர் ஆலோசனைகள் நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இன்று மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம்கள் அமைப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது.
அதன்படி, இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை முகாம் பணிகளில் ஈடுபடுத்த பரிந்துரை செய்து உத்தரவிடப்பட்டது. ஒவ்வொரு நியாய விலைக் கடைக்கும் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள். ரேஷன் கடை முகாம்களில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பத்தை பெற பணியமர்த்தப்படுவார்கள். ரேஷன் கடைகளில் இருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கும் தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்க சிறப்பு பணி அலுவலர் இலம்பகவத் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பள்ளி, சமுதாய நலக்கூடங்களில் சிறப்பு முகாம் நடத்தி மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் தரப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 500 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…