EPS Name Uploaded as AIADMK General Secretary! [file image]
அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி இபிஎஸ் தரப்பு அளித்த ஆவணங்களை ஏற்ற தேர்தல் ஆணையம், அதை இணையதளத்தில் பதிவேற்றியது. ஈபிஎஸ் நியமித்த நிர்வாகிகளை அங்கீகரித்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அதிமுக தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, அதிமுகவில் இபிஎஸ் தரப்பு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் தற்போது, அனைவரும் பார்க்கும்படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று, ஈபிஎஸ் நியமித்த நிர்வாகிகளை அங்கீகரித்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…