தமிழக அரசு நடத்திய நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்த ஒரு மாணவருக்கு கூட அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு இடம் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
12 ம் வகுப்பு முடிந்ததும் மருத்துவம் படிப்பதற்கு நீட் என்னும் நுழைவுத்தேர்வு உள்ளது. வெளியில், பல தனியார் கல்வி நிறுவனங்கள் நீட் தேர்வுக்கு என்று பயிற்சி அளித்து வருகிறது. அது போல், தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளிகளிலே சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு 19,355 மாணவர்கள் அரசு பள்ளியில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றனர். இதில் 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் குறைந்தபட்சம் 474 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அனால், அரசு பள்ளியில் படித்து எடுத்த மாணவர்களின் அதிகபட்ச மதிப்பெண்ணே 440 தான். இதனால், எந்த மாணவருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.
கடந்த வருடம் ஒப்பிடுகையில், தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு அதிகம். அனால், அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவு.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…